Warning: mysqli_connect(): Headers and client library minor version mismatch. Headers:50545 Library:50638 in /home/wwwsamay/public_html/admin/dbConn/db.php on line 8
  • அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
  • அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
  • அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்

அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் வரலாறு

பூஜாக்காலம்

பூஜைகள்நேரம்
உஷத்காலம் 6:00 மு.ப
காலைச்சந்தி 08:00 மு.ப
உச்சிக்காலம் 12:00 பி.ப
சாயரட்சை 6:00 பி.ப
2-ஆம் காலம் 8:00 பி.ப
அர்த்தஜாமம் 9:00 பி.ப

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்


கிருஷ்ணாவதாரத்தில் தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யசோதையின் குழந்தையாக மாயாதேவியும் அவதரித்தனர். பிறகு அவ்விரு குழந்தைகளும் இறைவன் விருப்பத்தினால் இடம் மாறின. தேவகியின் பிள்ளையால் தனக்கு அழிவு உண்டாகும் என்பதை அறிந்த கம்சன், பிள்ளைகள் இடம் மாறியதை அறியாமல் சிறையில் தேவகியிடமிருந்த பெண் குழந்தையைக் கொல்ல மேலே தூக்கினான். அக்குழந்தை அவள் கைகளிலிருந்து மேலே எழும்பி, வில், அம்பு, சூலம், பாசம், சங்கு, சக்கரம், வாள் முதலிய ஆயுதங்களைத் தரித்து தோன்றியது. அத்தேவியே "மகா மாரியம்மன்" என்ற கண்கண்ட தெய்வமாக அழைக்கப்பட்டாள். மக்களின் தீமைகளையும், தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் கண்கண்ட தெய்வமாக சமயபுரத்தில் அருள்பாலிக்கிறாள்.

மாரியம்மன் உற்சவத் திருமேனி ஆதியில் விஜயநகர மன்னர்களால் வழிபாடு செய்யப் பெற்று வந்ததென்றும் அந்த ஆட்சிக்குத் தளர்ச்சி நேர்ந்தபோது, இந்த சிலையை தந்தப் பல்லக்கில் கொண்டுவரப்பெற்றப்போது, பல்லக்கைத் தூக்கி வந்தவர்கள் அம்மன் திருமேனியை சமயபுரத்தில் கீழே இறக்கிவைத்து உணவு உட்கொள்ள சென்றார்கள் எனவும் பின்னர் வந்து தூக்க முயலும்போது பல்லக்கை தூக்க இயலவில்லை எனவும் பிறகு விஜயரங்கசொக்கநாதர் கண்ணனூரில் தனிக்கோயில் அமைத்து அம்மனை பிரதிஷ்டை செய்தார் எனவும் செவிவழிச் செய்தி கூறுகிறது. இதைக் குறித்தே சாய்ந்தாள் சமயபுரம், சாதித்தாள் கண்ணபுரம் என்ற முதுமொழியும் வழக்கில் உள்ளது.

அன்னை அருளாட்சி செய்யும் மாரியம்மன் கோயிலில் கல்வெட்டுகள் ஏதும் காணப்படவில்லை. எனவே, இத்திருக்கோயில் எப்போது கட்டப்பட்டது என்பதற்கு வரலாற்றுச் சான்று இல்லாமல் போய்விட்டது. எனினும் மண்ணச்சநல்லூர் அருகே கோபுரப்பட்டி என்று வழங்கப்படும் ஊரில் உள்ள பாச்சில் அமலீசுவரம் சிவன் கோயில் கல்வெட்டில் "பனமங்கலம், துறையூர்" போன்ற ஊர்கள் குறிப்பிடப்படுகின்றன. எனவே சோழர் காலத்திலேயே இங்கு மாரியம்மன் கோயில் இருந்திருக்க வேண்டும். பின்னர் போசள மன்னர் காலத்தில் மேலும் சிறப்பு அடைந்திருக்க வேண்டும். சமயபுரம் கோயிலில் கொடி கம்பத்தை அடுத்துள்ள மண்டபத்தின் தூண்களில் கீழ் பகுதியில் நாயக்க மன்னர்களின் உருவங்கள் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

எனவே 700 ஆண்டுகளுக்கு மேல் இக்கோயில் அமைந்துள்ளதென அறியலாம். சிறந்த பிரார்த்தனைத் தலமாகவும், சக்தித் தலமாகவும் இத்திருக்கோயில் விளங்கி வருகின்றது.